Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய சாதனைகளைப் படைத்த 'விக்ரம்' - 50வது நாளில்…

22 ஜூலை, 2022 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Vikram-in-50th-days

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் மிக அதிகமான லாபத்தை தமிழகத்தில் கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

ஓடிடி தளத்தில் இப்படம் ஜுலை 8ம் தேதி வெளியாகி அதிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓடிடியில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் இன்னமும் தமிழகத்தில் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியமே. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் மட்டும்தான் தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேலான வசூலைப் படைக்கும் நடிகர்கள் என்று இருந்தது. அதை தனது ஒரே படத்தில் மாற்றி அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் ஒன்றாக 'விக்ரம்' படம் உருவாகக் காரணமானவர் கமல்ஹாசன். அவரே தயாரித்து, தான் மட்டும் நாயகனாக நடிக்காமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருக்கும் தகுந்த அளவில் படத்தில் இடமளித்து வெற்றி பெற்றவர்.

கமல்ஹாசன் திரையுலகத்தில் அறிமுகமாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் அவருடைய படங்கள் இந்த அளவில் வசூல் சாதனை பெற்றதில்லை. அவர் நடித்து வெளிவந்த படங்களில் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டு பாகங்கள் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டிய படங்களாக அமைந்தன. அதே சமயம், 'விக்ரம்' படம் மற்ற நடிகர்கள் புரியாத சாதனயைப் படைத்துவிட்டது. அந்த சாதனையை அடுத்து எந்த நடிகர் முறியடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் யாருக்குக் கிடைக்கும்?2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் ... புகைப்படக்காரர்களை மிரட்டிய சித்தார்த் புகைப்படக்காரர்களை மிரட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Raj Kamal - Thiruvallur,இந்தியா
28 ஜூலை, 2022 - 14:30 Report Abuse
Raj Kamal இன்றய தேதியில் படம் ஓடுவது இங்கு கமெண்ட் போடும் பெருசுகளால் அல்ல. பதிநனைந்தில் இருந்து முப்பத்தைந்து வயதில் உள்ள அணைத்து ரசிக குஞ்சுகள் தான் காரணம். கமல் நடித்த மிக சிறந்த படங்கள் கூட இப்படி ஓடியதில்லை
Rate this:
Amjad -  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2022 - 16:07 Report Abuse
Amjad இந்த hype எல்லாம் ரெட் ஜெயின்டின் வேலை, black எல்லாம் white ஆகிறது. படம் அந்த அளவு வசூல் செய்யவில்லை.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 ஜூலை, 2022 - 10:47 Report Abuse
Natarajan Ramanathan நான் தீவிர கமல் ரசிகனாக இருந்தவன்.... ஆனால் இந்த படத்தில் அப்படி என்ன இருக்கு என்று இவ்வளவு ஹைப் சொத்து 50 நாட்கள் ஓட்டிவிட்டார்கள்...புரியவில்லை
Rate this:
22 ஜூலை, 2022 - 12:16Report Abuse
A Murugan...........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in