'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தொடங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை விழாக்குழு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டே இந்த விழாவில் நான் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். அப்போது கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இந்திய சினிமாவை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் இந்தியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகிய இரு சமூகங்களும் ஒருமனதாக ஒன்றாகக் கொண்டாடுவது ஒரு உற்சாகமான உணர்வு. என்கிறார் சமந்தா.
விழா இயக்குனர் மிது பௌமிக் லாங்கே கூறியதாவது: சமந்தாவுக்கு ஆஸ்திரேலியாவில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். அவர் படவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார். அவரை நாங்கள் கொண்டாடுவோம். இந்த ஆண்டு விழாவில் அவரது பணிக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.