இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டார். பின்னர் தமிழில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 30ம் தேதி வெளியாகயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை.
இப்படியான நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கும் நிலையில் மீண்டும் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. அதனால்தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதோடு தனது கர்ப்பத்தை மறைக்க, மும்பை விமான நிலையத்தில் கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர் கோட் போட்டபடி ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் செல்லும் புகைப்படங்களையும் பாலிவுட் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள்.