வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

சின்னத்திரை வட்டாரங்களில் சமீப காலங்களில் அதிகமாக அசைப்போடப்பட்டு வருவது பாவ்னி - அமீர் காதல் விவகாரம் தான். பிக்பாஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பாவ்னிக்கு, அமீர் லவ் ப்ரோபோஸ் செய்தார். ஆனால், அன்றிலிருந்து இன்று வரை அமீரின் காதலை பாவ்னி ஏற்றாரா இல்லையா என்பதை பற்றி வெளிப்படையாக சொல்லவில்லை. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் நடன போட்டியில், பாவ்னியின் அக்கா அமீரை பாராட்டி அவருக்கு மோதிரத்தை பரிசாக அளித்தார். அதை பாவ்னி, அமீருக்கு போட்டுவிட்டார். அப்போதே இவர்கள் காதல் விவகாரம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ள பாவ்னி, அமீரை பாசத்துடன் நெருக்கமாக கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில் 'நான் உன்னிடம் இருந்து பெறும் அன்பும் அக்கறையும் நிச்சயம் உனக்கும் இந்த பூமியிலிருந்து கிடைக்கும். எனது நல்லது கெட்டதுகளில் என்னுடனையே இருந்ததற்கு நன்றி. நிறைய சொல்ல நினைக்கிறேன் வார்த்தைகள் வரவில்லை. லவ் யூடா' என கூறி பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.