குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பிரபல நடிகையான காஜல் பசுபதி, தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு நடிக்க சென்றவர். தற்போதும் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துவிட வேண்டும் என வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார். வீஜேவாக இருந்த காலம் முதலே இவரை அனைவரும் காஜல் என்றே அழைத்து வருகின்றனர். ஆனால், இவர் உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி. சமூகவலைதளங்கள் மூலம் என்டர்டெய்மெண்ட் மற்றும் ஹாட் போட்டோஷூட் என அசத்தி வருகிறார். இதுநாள் வரையில் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் காஜல் பசுபதி என்ற தனது திரைப்பெயரை மட்டுமே பயன்படுத்தி வந்த அவர், தற்போது இன்ஸ்டாவில் 'தமிழ்ச்செல்வி பசுபதி' என்ற தனது நிஜப் பெயருக்கு மாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் எடுத்துக்கொண்ட பெஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் முதலில் தெரியும் படி வைத்து ரசிகர்களை கவரும் வகையில் புரொபைலை அழகாக மாற்றியுள்ளார். இருப்பினும் மற்ற சோஷியல் மீடியாக்களில் அவரது புரொபைலை காஜல் பசுபதி என்று மட்டுமே தொடர்ந்து வருகிறார்.