ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவேந்திரன். புலி ராகவேந்திரன் என்று சொன்னால் தான் நேயர்களுக்கு தெரியும் வகையில், அவர் நடித்த 'புலி' என்கிற கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். கடைசியாக 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரன் சம்பள பிரச்னை, வீட்டில் கமிட்மெண்ட் என சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சோகமான வீடியோ ரசிகர்களையும் கண்ணீர் விட செய்தது.
இந்நிலையில், அவர் வாழ்வில் மேலும் ஒரு சோகமான சம்பவமாக புலி ராகவேந்திரனின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ராகவேந்திரனின் உடல்நலம் மோசமடைய தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ட்யூபுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவேந்திரன், 'ஒரே ஒரு ஒன்சைட் லவ், டோட்டல் பாடி க்ளோஸ். வேணாம் நண்பர்களே' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பரிதாப நிலையை பார்த்து சோகமான ரசிகர்கள், ராகவேந்திரனுக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.