கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து |
தமிழில் ரன், பையா, சண்டக்கோழி என ஆக்சன் படங்களை மாஸாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. தற்போது தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ள லிங்குசாமி, தெலுங்கு இளம் முன்னணி ஹீரோவான ராம் கதாநாயகனாக நடித்துள்ள வாரியர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கீரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.
அதேசமயம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதாவது அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு லிங்குசாமியின் பயணத்தில் ஒரு தொய்வு ஏற்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இருமொழி படம் இயக்குவதாக லிங்குசாமி அறிவித்து அதன் துவக்க விழா பூஜை கூட சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு வருடங்கள் பல கடந்தும் அந்த படம் என்ன ஆயிற்று என்கிற தகவல் தெரியவில்லை.
இந்த நிலையில் வாரியர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லிங்குசாமியிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, “அல்லு அர்ஜுன் படம் கைவிடப்படவில்லை. அதே சமயம் அந்த படத்திற்கான சிறப்பான கதை இன்னும் முடிவாகவில்லை.. அதனால் தான் அந்தப்படம் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது. நிச்சயம் அல்லு அர்ஜுன் படத்தை ஒருநாள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார் லிங்குசாமி.