12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ஒருபக்கம் முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அவர் இருந்தாலே ஒரு பக்கம் படம் வியாபாரம் ஆவதுடன் ரசிகர்களும் அவரது போஸ்டரை பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் தியேட்டருக்கு வருகிறார்கள். அதேசமயம் இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பல படக்குழுவினர் யோகிபாபு இரண்டு காட்சிகளில் நடித்திருந்தாலும் கூட அவரை முன்னிலைப்படுத்தியே தங்களது படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் தற்போது யோகிபாபு நடித்துள்ள படம் தாதா. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் யோகிபாபு துப்பாக்கியை வைத்தபடி நிற்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் கதாநாயகன் என்னவோ நிதின் சத்யா தான்.
இந்த போஸ்டர் வெளியானதும் யோகிபாபு பதிவிட்டது : “இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யா தான் ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவு செய்து இதைப்போன்று விளம்பரம் செய்யாதீர்கள்.. நன்றி” என பதிவிட்டு படக்குழுவினருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
யோகிபாபுவின் இந்த பெருந்தன்மை குறித்து படத்தின் நாயகன் நிதின் சத்யா கூறும்போது, “ஒரு நண்பனை விட்டுகுடுக்காம, ரசிகர்களையும் விட்டுகுடுக்காம.. அந்த மனசு தான் யோகிபாபு” என்று கூறியுள்ளார்
இதற்கு முன்னதாகவும் இதே போன்று ஒரு படத்தில் தான் வெறும் இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நிலையில் தன்னை கதாநாயகன் போன்று சித்தரித்து விளம்பரம் செய்ததை கண்டித்து யோகிபாபு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.