ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
புதுடில்லி : மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, நடிகை ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை சித்தரிக்கும் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங். இவர், 2020ல் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் சவுமிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரியா சக்ரவர்த்தி, போதை மருந்தை சுஷாந்த் சிங்கிற்கு சப்ளை செய்து வந்துள்ளார். போதை மருந்துக்கான தொகையை ரியா தந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.
இந்த குற்றச்சாட்டை ரியா சக்ரவர்த்தி மறுத்து உள்ளார். அதேசமயம், சுஷாந்த் சிங் போதை மருந்து பயன்படுத்துவார் என அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். ரியா, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், ஒரு மாத சிறைத்தண்டனைக்குப் பின் ஜாமினில் வந்துள்ளார்.