ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்திய விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கானும் கலந்து கொண்டார் என்ற குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை கைது செய்தார்கள். அதையடுத்து நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு ஆரியன்கான் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஷாருக்கான் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகு ஆரியன்கானுக்கு ஜாமீன் கிடைத்தது.
அது குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பின்னர் ஆரியன்கான் போதை மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. அவரிடமிருந்து எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று சொல்லி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் அவரின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கும்படி ஆர்யன் கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிட்டுள்ளது.