நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இன்றைய தேதியில் நேஷனல் க்ரஷ் என அனைவராலும் குறிப்பிடப்படும் அளவிற்கு தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா வெளியான பிறகு இவரது மார்க்கெட் வேல்யூ கூடிவிட்டது. அதுமட்டுமல்ல ஹிந்தியிலிருந்து இவருக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா. ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது ஒரு விளம்பரப் படத்திற்காகத்தான்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, “இதுநாள் வரை வதந்தியாக இருந்தது இப்போது உண்மையாகி விட்டது.. டைகர் ஷெராப்புடன் தற்போது தான் விளம்பர படத்தில் இணைந்து நடித்து முடித்தேன். அவருடன் நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ள ராஷ்மிகா, படப்பிடிப்பு தளத்தில் தானும் டைகர் ஷெராப்பும் குறும்புத்தனமாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.