சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். அவர் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் நான்கு மாடி அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை 119 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுக்கு மாடி குடியிருப்பில் 16, 17, 18, 19 ஆகிய தளங்களில் அந்த வீடு அமைந்துள்ளதாம். மொத்தம் 11,266 சதுர அடி வீடு. மாடிப் பகுதி மட்டும் 1300 அடி. 19 கார்களை நிறுத்தும் வசதி கொண்டது. அதற்காக பத்திரப் பதிவுக் கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாயாம்.
ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரது வீட்டிற்கருகில்தான் ரன்வீர் சிங் வாங்கியுள்ள 'சாகர் ரேஷம்' என்ற இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறதாம். தங்களது ஓ பைவ் ஓ மீடியா கம்பெனி மூலம் ரன்வீர் சிங்கும், அவரது அப்பாவும் இந்த குடியிருப்பை புக் செய்துள்ளார்களாம்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை திருமணம் செய்துள்ள ரன்வீர் சிங் தற்போது 'சர்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படங்களில் நடித்து வருகிறார்.