பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழில் சூர்யா நடித்த '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், நாக சைதன்யா, ராஷி கண்ணா, 'குக்கூ' படக் கதாநாயகி மாளவிகா நாயர் மற்றும் பலர் நடிக்கும் படம் தெலுங்குப் படம் 'தேங்க் யூ'.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் உள்ள ஒரு வசனம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமந்தா உடனான, நாக சைதன்யாவின் முறிந்து போன காதல் திருமண வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுவதாக உள்ளது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
டிரைலரில் உள்ள ஒரு வசனத்தில், “உறவில் இருக்கும் ஒருவரைக் கட்டுப்படுத்தும் காதலை விட, விட்டுக் கொடுக்கும் காதல் சிறந்தது” என இருக்கிறது. நாக சைதன்யா, சமந்தா இருவரும் மனமுவந்து பிரிந்தார்கள். இருவரில் யார் விட்டுக் கொடுத்தது என்பதில் நாக சைதன்யாவின் ரசிகர்கள் அவர்தான் விட்டுக் கொடுத்ததாகச் சொல்லி வருகிறார்கள். மேலும், சமந்தாவை டேக் செய்தும் இந்த டிரைலரைப் பார்க்கும்படி கேட்டுள்ளார்கள்.