'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் பற்றி ஆலியா பட்டிடம் கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த ஆலியா "என் கணவரின் முன்னாள் காதலிகளுடன் எப்படி நட்பாக இருப்பது என்பது குறித்து எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல தோழிகள். எனக்கு அந்த இருவரையும் மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட கரன் ஜோஹரும் பதில் சொன்ன ஆலியா பட்டும் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகளின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர்கள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைப் என்பது அனைவருக்கும் தெரியும்.