'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிருத்விராஜ், சம்யுக்தா மேனன் விவேக் ஓபராய் நடித்த கடுவா படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சாஜி கைலாஷ் இயக்கி இருந்தார். படத்தை லிஸ்டின் ஸ்டீபன் சுப்ரியா மேனன் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோருக்கு கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து ஷாஜி கைலாஷூம், பிரித்விராஜூம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட விளக்கத்தில் "அந்த வசனம் வில்லனின் கொடூரத்தை ஆடியன்ஸுக்கு உணர்த்துவதற்காக வைக்கப்பட்டது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என்றாலும் அதனை தவறு என்று உணர்கிறோம். அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து தனது மன்னிப்பையும் இணைத்திருக்கிறார்.