பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி நடிக்கும் படம் தி வாரியர். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும், ஆதி வில்லனாகவும் நடித்துள்ளனர் தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற 14ம் தேதி வெளி வருகிறது.
இந்த படத்தில் சிம்பு 'புல்லட்...' என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடல் வைரலாக பரவியது. படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வந்தது அப்போது சிம்பு தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து திரும்பி உள்ள சிம்புவை ராம் புத்தனினி நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றியை தெரிவித்தார்.