சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இன்று இப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த அறிமுகப் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளது 'பொன்னியின் செல்வன்' நாவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இயக்கும் ஒரு படத்தில் இப்படி ஒரு தவறு நிகழலாமா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குறைபட்டு வருகிறார்கள்.
முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் 'ஆதித்த கரிகாலன்' என்பதற்குப் பதிலாக 'ஆதித்ய கரிகாலன்' என்று இருந்தது. இன்று வெளியான ஜெயம் ரவி போஸ்டரில் 'அருள்மொழி வர்மன்' என்பதற்குப் பதிலாக 'அருண்மொழி வர்மன்' என இருக்கிறது.
மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா, அல்லது பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாகப் படித்த உதவி இயக்குனர்கள் இல்லையா என்பது தெரியவில்லை. மக்கள் மனதில் ஆழப் பதிந்த ஒரு நாவலைப் படமாக்கி அது பற்றிய அறிமுகங்களை வெளியிடும் போது தவறுகளைப் பார்ப்பது இயக்குனரின் வேலைதானே என்று வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள். போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள் என்றும் கேட்கிறார்கள்.




