தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. விஷால் ஜோடியாக பட்டத்துயானை படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு அர்ஜூன் இயக்கத்தில் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்தார். இந்த நிலையில் அர்ஜூன் தன் மகளை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறார்.
தெலுங்கு படத்தை அர்ஜூனே இயக்குகிறார், விஷ்வக் சென் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.ஜி.எப் இசை அமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா அர்ஜுன், பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத், பிரபல தெலுங்கு நடிகரும் ஹீரோ மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா ஆகியோரை சந்தித்து அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அப்போது அர்ஜூனும் உடன் இருந்தார்.




