சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'விராட பருவம்' படத்தின் பிரமோஷன் பேட்டி ஒன்றை அளிக்கும் போது அவர் சொன்ன சில விஷயங்கள் சர்ச்சை ஆனது.
'காஷ்மீர் பைல்ஸ்' படம் பற்றியும், மாட்டுக்கறியை எடுத்துச்சென்ற இஸ்லாமியரைத் தாக்கிய நிகழ்வுக்கு என்ன வித்தியாசம் என்று சொல்லியிருந்தார். சர்ச்சை எழுந்த பின் அது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சாய் பல்லவி மீது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சாய் பல்லவிக்கு தெலங்கானா போலீஸ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதற்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி சாய் பல்லவின் மனுவை ரத்து செய்துள்ளார்.