தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளியான படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து என்ற பாடல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே வெற்றி பெற்றது. மேலும் இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் 200 கோடி வசூலித்தது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து வீடியோ பாடல் யு-டியூப்பில் 150 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளார்கள். இது குறித்த தகவலை பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
பீஸ்ட் படத்தையடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ , யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். விஜய் பிறந்தநாளில் வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இப்படத்திலும் அரபிக்குத்து பாடல் சாயலிலேயே ஒரு பாடல் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.