ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தமிழகத்தைச் சேர்ந்த மாஸ்ட்ரோ என அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அமெரிக்காவில் உள்ளார். 20ம் தேதி தான் சென்னை வருகிறார். இதனால் அங்கிருந்தபடி சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா.
பிரதமர், முதல்வருக்கு நன்றி
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது'' என குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போல் இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, ‛‛தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றி'' என்றார்.
எல்லோருக்கும் நன்றி
இளையராஜாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாததால் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள், இந்திய அரசு எனக்களித்த கவுரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி...'' என்றார் இளையராஜா.