175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் அதன்பிறகு பெண்குயின் படத்தில் நடித்தார். தற்போது அவர் தனது நண்பருடன் இணைந்து தயாரித்து நடிக்கும் படம் கேசினோ. வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், 'எரும சாணி' அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் தியாகராஜன், ஸ்டான்லி சேவியர் இசை அமைக்கிறார்கள், மார்க் ஜோயல் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. பணத்தை தேடி ஓடும் மனிதர்களும், அவர்களின் குணாதிசயமும்தான் படத்தின் கரு என்கிறார் மார்க் ஜோயல்.