உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி |
மணிகண்டன் இயக்கத்தில் நிஜ விவசாயி நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'கடைசி விவசாயி'. இதனை விஜய்சேதுபதியே தயாரித்திருந்தார். தியேட்டரில் வெளியான படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு அதிக மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கவுரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம் தற்போது மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது.
உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் 'லெட்டர் பாக்ஸ்' எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் கடைசி விவசாயி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ‛ஆர்.ஆர்.ஆர்' படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த 'விக்ரம்' படம் 11வது இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.