நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுகமாக ரெட் கார்டு போட்டு இருந்தது. இதன் காரணமாக சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் சமீபத்தில் அந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார் வடிவேலு.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அப்பாவாக முதன்மை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து இந்த மாமன்னன் படமும் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கக்கூடிய ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று அப்படக்குழுவில் தெரிவிக்கிறார்கள்.