குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானபோதும், அதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நிசப்தம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த அனுஷ்கா, அதையடுத்து ஒரு இளவட்ட தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இப்படியான நிலையில் தற்போது ஒரு காமெடி படத்தில் அனுஷ்கா நடிக்க போவதாக டோலிவுட்டியில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு பெரிதாக காமெடி வேடங்களில் நடிக்காத அனுஷ்கா, இந்த படத்தில் முழு நீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.