‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதால் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் கதாபாத்திரங்களுடன் கூடிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் போஸ்டர் மற்றும் கார்த்தி நடித்துள்ள வந்தியத் தேவன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி என்ற கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‛‛பழிவாங்கும் முகம் அழகானது. பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்'' என படக்குழு கேப்ஷன் கொடுத்துள்ளனர்.