'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெண்ணிலா கபடி குழு, வம்சம், வெள்ளக்காரதுரை, காஞ்சனா- 3, சர்தார் என பல படங்களில் நடித்தவர் மைனா நந்தினி. அதோடு ஏராளமான டிவி சீரியல்கள், டிவி ஷோக்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் பொன்னூஞ்சல் புடவைகள் என்ற பெயரில் ஒரு புடவை பிசினஸை தொடங்கி இருக்கிறார். இது குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள மைனா நந்தினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதே போல் நடிகை நயன்தாரா பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறார். சினேகா புடவை பிசினஸ் செய்து வருகிறார். பிரியா அட்லி ரெட் நாட் என்ற பெயரில் புதிய ஆடை நிறுவனத்தை தொடங்கி உள்ளார். தமன்னா மும்பையில் கோல்டு பிஸ்னஸ் செய்து வருகிறார். இப்படி பல நடிகைகளும் சைடு பிஸ்னஸ் செய்து வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகை மைனா நந்தினியும் இணைந்துள்ளார்.