சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. சினிமாவிலும் ஒரு சில படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்த மைனா நந்தினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது
இந்த நிலையில் தற்போது கொம்பன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் விருமன் படத்திலும் மைனா நந்தினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின்போது கார்த்தியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் மைனா நந்தினி.