புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண்பாண்டியன். அதிரடி படங்களுக்கு புகழ்பெற்றவர். பின்னர் தயாரிப்பாளராகி பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன், தும்பா படம் மூலம் அறிமுகமான இவர் அன்பிற்கினியாள் படம் மூலம் கவனிக்கப்பட்டார்.
அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஷாலினி இயக்கத்தில் உருவாகும் 'கண்ணகி' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் கூட பிகினியில் உடையில் போட்டோக்களை பதிவிட்டார்.
இந்நிலையில் பிரபல கலைஞர்களுடன் இணைந்து தீயை ஊதும் வித்தை, உடம்பில் நெருப்பை தேய்ப்பது மாதிரியான சாகசங்களை செய்யும் வீடியோ கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் துணிச்சல்லுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான சாகச செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.