நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் | 75வது நாளில் 'விக்ரம்' | பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் |
ஒரே ஷாட்டில் இரவின் நிழல் படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கும் பார்த்திபன், தான் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை மிகப்பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக நான்கு படங்களை ஹிட்டாக கொடுப்பது ஆச்சரியமான விஷயம். அதோடு கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோரை ஒரே படத்தில் இயக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். ஆனால் இத்தனை பெரிய ஸ்டார்களை ஒரே படத்தில் வைத்து விக்ரம் படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஒரு புதுமையான படத்தை 100 பேரை வைத்து இயக்கி விடலாம். ஆனால் ஒரு கமர்சியல் படத்தை நான்கு ஸ்டார்களை வைத்து வெற்றியாக கொடுப்பது மிகவும் கடினம். அந்த வேலையை லோகேஷ் கனகராஜ் சிறப்பாக செய்திருக்கிறார். கமல்ஹாசன் போன்ற ஒரு நடிகரை வைத்து இத்தனை பெரிய கமர்சியல் ஹிட் படம் கொடுத்த லோகேஷ் கனகராஜை மலை போன்று பாராட்ட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார் பார்த்திபன்.