பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர் எனப் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வில்லன் வேடங்களிலும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் நடித்து வருகிறார்.
'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர், அடுத்து 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தார். தெலுங்கில் 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்தவர் அடுத்து 'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
அதற்கடுத்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக 'ஜவான்' படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. தமிழ் இயக்குனரான அட்லி இயக்கி வரும் இப்படத்தில் தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். யோகி பாபுவும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது விஜய் சேதுபதியும் இணையப் போகிறார் என்கிறார்கள்.
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து ஹிந்தியிலும் வில்லனாக மாறுகிறார் விஜய் சேதுபதி.