‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உட்பட பலர் நடிக்க, தமன் இசை அமைக்கிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் விரைவில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், வம்சி ற்கனவே இயக்கி வெளியான தோழா படம் ஒரு பிரெஞ்சு படத்தின் தழுவல் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படமும் பிரெஞ்சு மொழியில் வெளியான லார்கோ வின்ச் என்ற படத்தின் தழுவல் என்கிற ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லார்கோ வின்ச் படத்தில் தொழில் அதிபர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதன் பிறகு அவருக்கு ஒரு ரகசிய வாரிசு இருப்பதை அறிந்து அந்த வாரிசை கொல்ல வில்லன் திட்டமிடுகிறான். அந்த பிரச்சனையில் இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறார் என்கிற கதையில்தான் அப்படம் உருவாகி இருந்தது. இப்போது விஜய்யின் வாரிசு படமும் இந்த கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.