குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தெய்வத்திருமகள் படத்தில் டைரக்டர் விஜய்யின் இயக்கத்தில் நடித்த அமலாபால், தற்போது அதே இயக்குனரின் தலைவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏற்கனவே டைரக்டர் விஜய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருப்பதால், இப்போது அவர்களைப்பற்றிய செய்தி கோலிவுட் வட்டாரங்களில் இன்னும் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிலும் தலைவா படப்பிடிப்பில் மதிய வேளைகளில் சரியாக ஒரு மணிக்கு அமலாபால் சாப்பிடவில்லை என்றால் டைரக்டர் விஜய் துடித்துப்போகிறாராம். என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்பவர், அவருக்கு உடனடியாக உணவு உபசரிப்பு நடத்த சம்பந்தப்பட்டவர்களை விரட்டுகிறாராம். அந்த அளவுக்கு அவர்களின் நெருக்கம் இப்போது இன்னும் அதிகரித்திருக்கிறதாக தகவல்.
ஆனால் இந்த சூழ்நிலையால் தங்களது காதல் கிசுகிசு இன்னும் பெரிய அளவில் புகைந்து விடக்கூடாது என்று நினைத்த அமலாபால், தற்போது யாராவது காதல் செய்தியை கிண்டினால், காதல் என்றாலே தனக்கு என்னவென்று தெரியாதது போல் அப்பாவியாய் பார்க்கிறார். அதோடு, நான் ரொம்ப சின்ன பொண்ணு. எனக்கு இன்னும் காதலிக்கிற வயசே வரவில்லை என்றும் பச்சக்குழந்தைபோல் கூறி வருகிறார். ஆனால், அம்மணியின் இந்த ஸ்டேட்மென்டை கேட்டு, கோலிவுட் வட்டாரங்களில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.