Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அருண் - அர்ச்சனா காதலை கன்பார்ம் செய்த புகைப்படம்!

06 ஜூலை, 2022 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Arun---Archana's-photo-confirmed-their-love!

சின்னத்திரையின் புதிய காதல் ஜோடியான அருண் - அர்ச்சனா தான் இன்றைய நாளின் ஹாட் டாக்ஸ். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டில் விஜய் டிவி பிரபலங்கள் அர்ச்சனாவை டாக்டர், டி என் ஏ டெஸ்ட் என கிண்டல் செய்வதும் அதற்கு அருண் வெட்கப்படுவதும் வீடியோவாக வெளியாகி வைரலானது. இருப்பினும் அருணோ, அர்ச்சனவோ இந்த காதல் சர்ச்சை குறித்து இதுநாள் வரையில் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என்றும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் எனவும் சீரியல் வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. எனவே, உண்மையில் இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் குழம்பி தவித்து வந்தனர்.

இந்நிலையில், அருண் - அர்ச்சனா காதலை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாரதி கண்ணம்மா அருணும், ராஜா ராணி 2 வில்லி அர்ச்சனாவும் ஒன்றாக காருக்குள் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களுடன் சீரியல் நடிகை ரித்திகாவும் அமர்ந்துள்ளார். அருண் - அர்ச்சனா காதல் விவகாரம் வெளியாகிய இத்தகைய நாட்களில் அவர்கள் ஒன்றாக சேர்ந்திருக்கும் புகைப்படம் முதன்முதலாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இருவரும் தங்கள் காதலை கிட்டத்தட்ட கன்பார்ம் செய்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜாசிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - ... நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! நீண்ட நாட்களுக்கு பின் வெளியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)