அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகர் கமலின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன், 'ஹார்மோன்' ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை நீர்கட்டி பிரச்னைக்கு ஆளாகியுள்ளார். இவ்வகை நோய், 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும். உடற்பயிற்சி, உணவு முறை மாற்றத்தால், இப்பாதிப்பை சரி செய்து வருகிறார். இதுகுறித்து, ஸ்ருதி வெளிப்படையாக பேசியதுடன், உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் சில நாட்களாக, ஸ்ருதி ஹாசன் உடல்நிலை மோசமடைந்து, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அபாய கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து, ஸ்ருதி நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:ஹைதராபாதில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக, என் உடல்நிலைப் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகின்றன. பெண்களுக்கு பரவலாக ஏற்படுகிற பிரச்னை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நான் தற்போது நலமாக உள்ளேன். எனக்கு எந்த பிரச்னையும் பெரிய அளவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.