‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
'போத்தனூர் தபால் நிலையம்' என்ற படம் மே மாதக் கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியானது. பிரவீண் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்க, கதாநாயகியாக அஞ்சலி ராவ் நடித்திருந்தார். இப்படத்திற்காக இயக்கம் மட்டுமல்லாமல் பல வேலைகளையும் பார்த்ததாக பிரவீண் கடந்த சில நாட்களாகவே பல பதிவுகளை சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். நேற்று ஒரு பதிவில் படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டுள்ளார்.
“அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் ஆடைகள் என்னால் மட்டுமே துவைக்கப்பட்டன. வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எங்களிடம் ஒரே ஒரு செட் மட்டுமே இருந்தது, அதை சில வருடங்களாக மெயின்டைன் செய்தாக வேண்டும். நான் கதாநாயகியின் ஆடையைத் துவைத்த போது எனது உதவி இயக்குனர் இந்த புகைப்படத்தை எடுத்து எனது மனைவிக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும், யூகியுங்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.