நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஜுன் 3ம் தேதி வெளியான படம் 'விக்ரம்'. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 300 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது என்கிறார்கள்.
தமிழகத்தில் 180 கோடி, தெலங்கானா, ஆந்திராவில் 41 கோடி, கேரளாவில் 40 கோடி, கர்நாடகத்தில் 25 கோடி, இதர இந்திய மாநிலங்களில் 17 கோடி என இப்படம் 300 கோடியைக் கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 180 கோடி வசூலைக் கடந்துள்ளது. 200 கோடியை இந்தப் படம் கடக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆனால், ஜுலை 8ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்குள் தமிழகத்தில் மேலும் 20 கோடியை வசூலிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் ஓடிடியில் வெளியான பின்னும் சில படங்கள் தியேட்டர்களில் ஓடி வசூலித்ததும் நடந்துள்ளது. ஒரு மாதம் ஆன பின்னும் இன்னும் தமிழகத்தில் பல தியேட்டர்களில் 'விக்ரம்' படம் ஓடி வருகிறது. அதனால், 200 கோடி சாதனை புரியவும் வாய்ப்பிருக்கிறது.