மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது |

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு முன்பே நடிகர் துல்கர் சல்மான், தெலுங்கில் மகாநடி என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது சீதாராமம் என்கிற தனது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹனுராகவபுடி இயக்கிவருகிறார். கதாநாயகியாக நடிக்க மிருனாள் தாக்கூர் நடிக்க முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.
கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் முகாமிட்ட படக்குழுவினர் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். ஆச்சரியமாக காஷ்மீருக்கு துல்கர் சல்மான் பெர்சனல் ஆகவும் படப்பிடிப்பிற்காகவும் வருவது இதுதான் முதல்முறை. இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான், “சீதாராமம் படம் எனது நீண்டநாள் காஷ்மீர் கனவை நிறைவேற்றி விட்டது. இங்கு படப்பிடிப்பை நடத்தியபோது ஏதோ புகைப்படத்திற்குள்ளோ அல்லது பெயிண்டிங்கிற்குள்ளோ நுழைந்து விட்டது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. அதேபோல அங்குள்ள மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதை அறிந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்ததோடு மீண்டும் இதுபோன்று தொடர்ந்து இங்கே வந்து படப்பிடிப்பை நடத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டனர்” என்று தனது காஷ்மீர் அனுபவம் குறித்து பிரமிப்புடன் விவரித்துள்ளார் துல்கர் சல்மான்.