ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம், 'மஹா'. சோலோ ஹீரோயினை கதை களமாக கொண்ட இந்த படத்தில் நட்புக்காக சிலம்பரசன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஶ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை, எலெட்க்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இணைந்து தயாரித்துள்ளனர்.
சிம்பும், ஹன்சிகாவும் நிஜத்தில் காதலித்து பிரிந்தவர்கள் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும் தயாரிப்பாளருக்கு இருந்த சில பிரச்சினைகள் காரணமாக படம் வெளிவரவில்லை. படம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது 50வது படம் வெளிவரவில்லை என்று ஹன்சிகாவும் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 22ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டு விநியோக உரிமையை ஆன்ஸ்கை என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்தமுறையாவது படம் வெளியாகுமா... பொருத்திருந்து பார்க்கலாம்.