ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
2022ம் ஆண்டின் ஆறு மாதம் நாளையுடன்(ஜூன் 30) முடிவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பம் கொரோனா தாக்கத்தால் சற்று பாதிப்படைந்தாலும் அதன்பின் சமாளித்து எழுந்தது. டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2', நேரடிப் படங்களான 'எப்ஐஆர், வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், டான், விக்ரம்' ஆகியவையும் வசூலைக் கொடுத்து திரையுலகினரை மகிழ்ச்சியடைய வைத்தன.
அடுத்த ஆறு மாதங்களில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 11ம் தேதி விக்ரம் நடிக்கும் 'கோப்ரா', 12ல் விஷால் நடிக்கும் 'லத்தி' ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ல் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' வெளியாக உள்ளது. 31ம் தேதி கார்த்தி நடித்துள்ள 'விருமன்' வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 8ம் தேதி ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்', 15ம் தேதி சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதக் கடைசியில் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகலாம்.
அக்டோபர் மாதத்தில் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகயேன் நடித்துள்ள 'பிரின்ஸ்', கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இவற்றைத் தவிர மேலும் சில படங்கள் கடைசி கட்டப் பணிகளில் உள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய படங்களுக்கு இடையில் கணிசமான தியேட்டர்கள் கிடைத்தால் அப்படங்களும் வெளியாகலாம். அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 100 படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.