'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு போன்ற பல நல்ல படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது .
சுந்தர்.சி இப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.