ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்தப் படம் மட்டுமல்லாமல் ஷங்கர், ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தையும் தயாரித்து வருகிறார். பல தெலுங்கு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும் கூட.
இவருக்கு 2020ம் ஆண்டு வைகா ரெட்டி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தில் ராஜுவின் முதல் மனைவி அனிதா உடல் நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்ததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
52 வயதான தில் ராஜுவை விட பல வயது குறைந்தவர் அவரது இரண்டாவது மனைவி வைகா. கர்ப்பமடைந்திருந்த வைகா இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையை நலமுடன் பெற்றெடுத்தார். 'வாரிசு' படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்ததால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
தில் ராஜுவுக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகள் இருக்கிறார். அவர் அப்பாவுடன் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தில் ராஜுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.