ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
சரிகம நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வரும் தொடர் ரோஜா. இதில் நாயகனாக சிபு சூரியனும், நாயகியாக பிரியங்கா நல்கரியும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஷாம்லி சுகுமார், வடிவுக்கரசி, வெங்கட் ராகவன், ஸ்மிருதி காஷ்யப் உள்பட பலர் நடிக்கிறார்கள். தனஷ் இயக்கி வந்த இந்த தொடரை தற்போது சேக்கிழார் இயக்கி வருகிறார். ஆயிரம் எபிசோட்களை தாண்டிய இந்த தொடரில் இருந்து விலகுவதாக தொடரின் நாயகன் சிபு சூரியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நடிப்பேன். தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியுடன் நான் மற்றொரு புதிய பயணத்தை தொடங்குகிறேன். மக்கள் இது நாள் வரை எனக்கு தந்த ஆதரவிற்கு "குட்பை'' சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், நான் மறக்கவே முடியாது. மீண்டும் உங்களை புதிய பயணத்துடன் சந்திக்கிறேன். என்று குறிப்பிட்டு உள்ளார்.