'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக அமைவது ரியாலிட்டி மற்றும் கேம் நிகழ்ச்சிகள் தான். அந்த வகையில் வித்தியாசமான கான்செப்ட்டுகளோடு விஜய் டிவி பல தரமான நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. அந்த வகையில் முன்னதாக மூன்று சீசன்களாக வெளிவந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை.
இதில் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையர்களோடு கலந்து கொண்டு கேம் விளையாடுவர். இந்நிலையில், சீசன் 4-க்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. இம்முறை இந்நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்க உள்ளதாகவும், போட்டியாளர்களாக ரேகா கிருஷ்ணப்பா - கிருஷ்ணா, பரீனா - உபைத் ரஹ்மான், சிங்கப்பூர் தீபன் - சுகன்யா, ப்ரவீன் - ஐஸ்வர்யா, சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.