பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் |

உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் மணி ஹீஸ்ட். இதற்கு அடுத்த இடத்தை பிடித்த தொடர் ஸ்குயிட் கேம். மணி ஹீஸ்ட் முடிந்து விட்டது. தற்போது ஸ்குயிட் கேமின் இரண்டாம் சீசன் வெளிவர இருப்பதை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தென்கொரிய தொடரான ஸ்குயிட் கேம் உலக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. குலைநடுக்க வைக்கும் காட்சிகளுடன் திக் திக் தொடராக இது இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெப் சீரிஸ்களை பின்னுக்கு தள்ளியது இந்த கொரிய தொடர். தொடரின் இயக்குனர் வாங்டாங் யங் கூறியிருப்பதாவது: ஸ்குயிட் கேம் முதல் சீசனை உருவாக்க 12 வருடங்கள் ஆனது. ஆனால் 12 நாளில் உலகின் பிரபலமான தொடராக மாறியது. இப்போது சீசன் 2 அதே தரத்தோடும், வேகத்தோடும் வருகிறது. என்று கூறியிருக்கிறார்.