18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
நடிகை கனிகா வெற்றிகரமாக தனது 14வது திருமண நாளில் அடி எடுத்து வைத்துள்ளார். தமிழில் பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கனிகா, சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது திருமண நாளில் கனிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "14 வருடங்கள் ஒன்றாக வளர்ந்தோம்... முட்டாள்தனமான வாக்குவாதங்கள், பைத்தியக்காரத்தனமான சண்டைகள்.. எங்கள் அரவணைப்பில் ஆறுதல் கண்டோம், சில கஷ்டங்களை சந்தித்து வெற்றியை ஒன்றாக ருசித்தோம். இன்று எங்களுக்கு மகிழ்ச்சியான திருமண நாள்! நன்றி ஷ்யாம், நீங்கள் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் ஆக்கிவிட்டீர்கள் என்று தனது கணவருக்கு வாழ்த்துக்களையும் தனது நன்றியையும் தெரிவித்துள்ள கனிகா.