லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 169வது படத்திற்கு ‛ஜெயிலர்' என பெயரிட்டு, டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
‛அண்ணாத்த' படத்திற்கு பின் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கான திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை ஜெயில் தொடர்புடையது என்றும், அதனால் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்படலாம் சில தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன.
இந்நிலையில் இன்று(ஜூன் 17) காலை 11 மணிக்கு ரஜினி பட தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு ‛ஜெயிலர்' என பெயரிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் நீண்ட கத்தி ஒன்றும், அதில் ரத்தம் படிந்தும் காணப்படுகிறது. தற்போது இந்த டைட்டில் போஸ்டர் வைரலாகி வருகிறது.