ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். ஆண்டுதோறும் கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று முதல் ஆளாக கமல் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்திவிட்டு அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்போது 4 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கமல்ஹாசனும் மகிழ்ச்சியில் இருக்கிறார். படம் வெளியான அன்றே தியேட்டருக்கு சென்று கமல்ஹாசன் என்ட்ரி ஆகும் காட்சியில் தியேட்டர் திரைக்கு ஆரத்தி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரோபோ சங்கர்.
இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அது ஆழ்வார்பேட்டை கமல் அலுவலத்தில் இருந்து வந்தது. சார் உங்களை பார்க்கணும்னு விரும்புகிறார் வர முடியுமா என்பதுதான் அந்த அழைப்பு. அலறி அடித்து ஓடிய ரோபோ சங்கருக்கு ஒரு அழகான பரிசு காத்திருந்தது. அது கமல்ஹாசனின் வெற்றி முத்தம். இப்போது ரோபோ சங்கரும் உற்சாகத்தில் இருக்கிறார்.