ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி | சித்தார்த்-தின் மிஸ் யூ தள்ளிப்போனது | நண்பனை நினைத்து வருந்திய வைஷ்ணவி அருள்மொழி |
சாய்பல்லவி நடித்துள்ள விராட பருவம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டார் சாய்பல்லவி. இதன் ஒரு பகுதியாக சாய்பல்லவி அளித்த ஒரு பேட்டியில் மதங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதும் இரண்டுமே மதவன்முறை தான். மதத்தின் பெயரால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை பசு காவலர்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். அவரின் இந்த கருத்து நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.