இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெற்றி பெற்றது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் திட்டமிட்டனர். அதன்படி இரண்டாம் பாகத்திற்கு மேலும் மெருகூட்ட கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத ஆரம்பித்தார் சுகுமார். இதற்காக சில மாதங்களை அவர் எடுத்துக் கொண்டார். தற்போது படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டார்களாம்.
அதனால், ஜூலை மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். அதற்காக அல்லு அர்ஜுன் இப்போதே தன்னை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகவும், அதிக பொருட்செலவிலும் எடுக்கப்பட உள்ளதாகச் சொல்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.